வந்தவாசி, மார்ச் 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்தி அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் யாகசாலை பூஜை நடந்தேறியது . இரவு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்று மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் பவனி வந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில் திருவிழா..