கிருஷ்ணகிரி, ஜூன் 28:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) செயலாளர் அவ்வை வி.சுரேஷ் பரிந்துரையின் பேரில், மத்தூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளராக வி.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள வி.முருகனுக்கு கட்சியின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
புதிய பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி, கட்சியின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வி.முருகன் தெரிவித்துள்ளார்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.