February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போலி மருந்து நிறுவனம் பற்றி பொய்களைக் கூறும் எதிர்கட்சிகளுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் கடும் கண்டனம்.​புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்கத் தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.​புதுவையில் நீண்ட காலமாக மருந்து மாத்திரை முறைகேடுகள் மற்றும் அனுமதி பெறாத மருந்து கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தற்போதைய அரசை குறை கூறி வருவதை வன்னிய முன்னேற்ற இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.​இந்த முறைகேடுகள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தவை என்றும், குறிப்பாக அந்த அதிகாரிகளை நியமித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் என்றும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசை குறை கூறிக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வது தவறு. சுகாதாரத்துறையை பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்பது முறையல்ல என்று அவர் கூறியுள்ளார்.

சபாநாயகர் மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியின்படி, குறிப்பிட்ட அந்த மருந்து கம்பெனி காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது. மேலும், இதை வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி ஆகியோரின் உறவினர்கள் நடத்துகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியக் கட்சிகள் செய்த தவறுகளுக்காக, அல்லது அவர்கள் மற்றவர்களுக்கு இடங்களை வாடகைக்கு விட்டதன் மூலமாக நடந்த தவறுகளுக்காக, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தாங்கள் செய்த தவறுகளை மற்றவர்கள் மீது பழி போடக் கூடாது. மக்களை ஏமாற்றலாம், ஆனால் இயக்கத் தலைவர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள அவர், தேசியக் கட்சிகள் இரண்டு பேரும் சண்டையிட்டுக்கொண்டு மாநிலக் கட்சித் தலைவரான முதலமைச்சர் ரங்கசாமியை குறை கூறக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp