கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மோட்டூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட பசுமை குழு நிதியின்கீழ், அப்பகுதியில் பல இன மரத்தோட்டம் அமைக்கும் உயரிய நோக்கில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று, இந்த மரக்கன்றுகளை நட்டு ஒரு ஆண்டிற்குத் தொடர்ந்து பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை ஆட்சியர் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இங்கு வேம்பு, புங்கன், நாவல், அரசு உட்பட 24 வகையான மர இனங்கள் நடப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, 12 ராசிகளுக்குரிய செடிகள் கொண்ட ‘ராசி வனம்’ மற்றும் 27 நட்சத்திரங்களுக்குரிய செடிகள் வளர்க்கப்படும் ‘நட்சத்திர வனம்’ ஆகிய சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆட்சியர் பார்வையிட்டுப் பாராட்டினார்.
இந்த ஆய்வின்போது, கோட்ட வன அலுவலர் தினேஷ்குமார், போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன், பர்கூர் வனச்சரக அலுவலர் மகேந்திரன் மற்றும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…