புதுச்சேரி லெனின் வீதி சந்திப்பில் பாபாசாகிப் அவர்களின் அலங்காரங்களுடன் திருஉருவப்படத்தை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு முன்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது
அங்கிருந்து வாகனத்தில் ஊர்வலமாக சென்று மிஷின் வீதி மாதா கோவில் அருகில் ஒன்று கூடி பேரணியாக சட்டப்பேரவை அருகில் உள்ள பாபாசாகிப் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மலர் அஞ்சலி மற்றும் மரியாதை செய்யப்பட்டது
மதியம் 12 மணி அளவில் லெனின் வீதி சந்திப்பில் ஏழை எளிய மக்களுக்கு அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது
இந்த நிகழ்விற்கு தேசிய மக்கள் முன்னணி நிறுவன தலைவர் சீ.சு.சுவாமிநாதன் தலைமை தாங்க பொதுச் செயலாளர் இன்னாசி ராக், சிவா துணைத் தலைவர் ஜெபின லாசரஸ், ராஜேஷ் பொருளாளர் சுரேஷ் செயலாளர்கள் தில்லை ஆறுமுகம், ரெஜினா டேவிட் ஜோசப், இவோன் சுவாமிநாதன் இணைச் செயலாளர்கள் சதீஷ், மணிவன்ணன்,வினிதா, மஞ்சுளா, உள்ளிட்டோரும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர்கள் சஞ்சய் குமார், பரமேஸ்வரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கெடுத்தனர்

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.