July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர் சந்திப்பு அப்பொழுது அவர் கூறியதாவது!

இலாகா மற்றும் சபாநாயகர் பதவிக்காக பாஜகவினர், முதல்வர் ரங்கசாமியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவிடம் அடிபணியாமல் இதே பாணியில் முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட வேண்டும்.

முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிகிறது.

சபாநாயகர் நியமன கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் துறைகள் முடங்கியுள்ளன.

அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.

“தமிழக முதல்வர் போல ஊழல் செய்யமாட்டேன்” என ரங்கசாமி கூற தயாரா?

தமிழக முதல்வரிடம் இருந்து ரங்கசாமி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழலை தடுக்க முடியுமா?

முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள 6 புரோக்கர்களை வெளியேற்ற ரங்கசாமி தயாரா? என சவால்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி