June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆ.வீ. ஜானகிராமன் நினைவு நாள்திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் திமுக–வினர் நினைவஞ்சலி!

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் அவர்களின் 7–ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாநில கழகம் சார்பில், நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதி–காமராஜர் சாலை சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாநில திமுக அமைப்பாளரும், மேனாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகிராமன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ராமசாமி, ப. செல்வநாதன், ந. தங்கவேலு, பெ. வேலவன், ஜெ. வேலன், எஸ். தர்மராஜன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், பாண்டு அரிகிருஷ்ணன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், கலியகார்த்திகேயன், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், சே. ராதாகிருஷ்ணன், செ. சத்தியவேலு, அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் புலவர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு (எ) சண்முகசுந்தரம், மாநில துணை அமைப்பாளர்கள் காசிநாதன், கண்ணன், அருண், தேவேந்திரன், பாலபாரதி, ரமேஷ், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ராம்குமார் மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.