June 18, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி சுசிலாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு

புதுச்சேரி, ஜூன் 8:
புதுச்சேரி சுசிலாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் (Soucilabai GGHSS) புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

GLMF புதுச்சேரி ஹெரிட்டேஜ் ரவுண்ட் டேபிள் 167 மற்றும் புதுச்சேரி லேடீஸ் சர்க்கிள் 187 ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இந்த நவீன வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவிற்கு ராஜ் பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் அவர்கள் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் அமைப்பின் தேசிய மற்றும் பிராந்திய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேசிய தலைவர் ரசித் பன்சால், ஏரியா தலைவர் கரண் கோயல், அசோக் ஆர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், ரவுண்ட் டேபிள் 167 மற்றும் லேடீஸ் சர்க்கிள் 187 அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அரசுப் பள்ளி மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்கவும் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் முறையில் கற்றல் பெறுவதற்கான வாய்ப்புகள் மாணவிகளுக்கு அதிகரிக்கும் என்றும், இது எதிர்கால கல்விக்கான முக்கிய முன்னேற்றமாக அமையும் என்றும் விழாவில் பேசப்பட்டன.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.