புதுச்சேரி வில்லியனுர் அணி மீண்டும் சாம்பியன்: பி.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மாகி மெகலோ ஸ்டிரைக்கர்ஸ் அணி வீழ்ச்சி!*
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், வில்லியனுரூர் மோகித் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
துத்திப்பட்டு சீகேம் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், வில்லியனுரூர் மோகித் கிங்ஸ் மற்றும் மாகி மெகலோ ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியில் டாஸ் வென்ற மாகி மெகலோ ஸ்டிரைக்கர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களம் கண்ட வில்லியனுரூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகுல் ராகவ் மற்றும் பானு ஆனந்த் ஜோடி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பவர் பிளே ஓவர்களின் கடைசிப் பந்தில் பானு ஆனந்த் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முகுல் ராகவ் 41 ரன்களிலும், அமான் கான் 11 ரன்களிலும் வெளியேறினர்.
இதன்பிறகு வந்த ஹர்ஷ் வைஷ்ணவ் (3), பிரித்வி கண்ணா (6), சாவில் சஞ்சிவ் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னால் ஜோடி சேர்ந்த ஆகாஷ் மற்றும் ஹாரிஸ் மரைக்கார் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஹாரிஸ் மரைக்கார் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அக்னிச் சிறகாய் மாறிய ஆகாஷ் புகழேந்தி வெறும் 37 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதன் மூலம் வில்லியனுரூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
201 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மாகி மெகலோ ஸ்டிரைக்கர்ஸ் அணியால் வில்லியனுரூரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் வில்லியனுரூர் மோகித் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து, 2-வது முறையாக பி.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

More Stories
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..
செட்டிக்காட்டில் கராத்தே தகுதிப்பட்டை வழங்கும் விழா – அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு