July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நின்றிருந்த வாகனத்தின் பின்னால் கார் மோதி ஒருவர் பலி 5 பேர் காயம்.

திருச்சி ஜூலை 21

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடி இரவு நேரங்களில் சுங்கச்சாவடி முன்பாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் அதேபோல் இன்று காலை சுங்கச்சாவடி முன்பாக திருவாரூர் புது பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஜித்ராஜ் என்பவர் தஞ்சாவூரில் இருந்து பொள்ளாச்சிக்கு இறக்குவதற்காக வைக்கோல் ஏற்றி வந்தார் தூக்கம் வந்ததால் லாரியை சுங்கச்சாவடி 100 மீட்டர் முன்பாக தனது ஈச்சர் வாகனத்தை நிறுத்தினார் பின்னர் அதிகாலை ஏழு மணி அளவில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்து வரும் நண்பர்கள் 6 பேர் தனது மாருதி எர்டிகா காரின் சுற்றுலா செல்வதற்காக பழனிக்கு செல்லும் பொழுது முன்னாள் நின்ற லாரியின் மீது பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது இதில் செர்லதாசமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார் மேலும் உடன் வந்த ஐந்து நபர்களும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.