June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி

புதுச்சேரி, ஜூன் 19:

இன்று அதிகாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். காலை 5.00 மணிக்கே மாணவர்கள் வந்து ஆர்வத்துடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்கள் பழைய கோர்ட் பகுதி முதல் செக்ரட்டேரியட் பகுதி வரை நீளமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், நிகழ்ச்சிக்கான ஒலி வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்படாததால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, ஸ்பீக்கர்கள் காந்தி சிலை அருகில் மட்டுமே வைக்கப்பட்டிருந்ததால், தூரத்தில் இருந்த மாணவர்களுக்கு பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் தெளிவாக கேட்கவில்லை.

இதனால், பல மாணவர்கள் அருகில் இருந்தவர்களின் செயல்பாடுகளை பார்த்து பின்பற்ற வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும், சரியான ஒலி இல்லாத காரணத்தால் யோகா பயிற்சியின் நேரம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான ஒலி வசதிகளை அனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட நடிகரும் சமூக சேவகருமான பாண்டி ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இன்னும் இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறவுள்ளதால், அதற்குள் தேவையான வசதிகள் செய்யப்பட்டால், இறுதி நாளில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்து சிறந்த முறையில் நிகழ்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.