August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி புகார் மனு !!

ஆக-20
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மடத்துக்குளம் வட்டம் காரத்தெழுவு கிராம பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவகுமார் என்பவர் கடந்த மாதம் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர மோட்டார் வாகனம் தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெறப்பட்ட வாகனங்களில் மூன்று சக்கரம் பொருத்தப்படாமல் இரண்டு சக்கர வாகனமாக பயன்படுத்தி வருவதால் பல்வேறு ஆபத்துக்கள் விளைவிப்பதாக கருதி,
அவர் உடுமலைப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம்
ஏழு இரு சக்கர வாகனங்களை வாகன எண்ணை குறிப்பிட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்திருந்தார்.
மாற்றுத்திறனாளியான சிவகுமாரை பல்வேறு கோணங்களில் சித்தரித்து போஸ்டர் அடித்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.
அதனை தொடர்ந்து மன உளச்சலுக்கு உண்டான
சிவக்குமார் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்..