June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா..

ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் விஜய பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

ஈரோடு. ஜூன். 29

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் விஜய் பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடைபெற்ற முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு 52 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் அவரின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக நேற்று காலை ஈரோடு பெரியார் நகர் 80 அடி ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி பொதுமக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக நேற்று கடைபிடிக்கப்பட்ட உலக போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு அமைச்சர் விஜய் பாலாஜி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த மோகன் ஈரோடு மாநகர இணை செயலாளர்
ஹக்கீம், பெரியார் நகர் பகுதி செயலாளர் சரவணன், இணை செயலாளர் அறிவரசன், நிர்வாகிகள் ஹரிவரசன் உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் துணை மேயர் வி
செல்வராஜ் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெகதீசன், சபுராமா சாதிக் பாஷா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.