செக்கோவர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் மேம்பாடு குறித்த முதல் கட்ட பயிற்சி
1 min read
செஞ்சி ஜன 26
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவர் நிறுவனத்தின் பழங்குடியின குழந்தைகள் உரிமைகள் மற்றும் கல்வி பாதுகாப்பு திட்டத்தின் அன்னையர் மன்ற உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி நடைபெற்றது . செக்கோர் இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் தலைமையிலும் சென்னை ஹோப் எவர் பவுண்டேஷன் இயக்குனர் கயல்விழி முன்னிலையிலும் நடைபெற்ற பயிற்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .செஞ்சி வல்லம் மேல்மலையனூர் ஆகிய வட்டாரத்திற்கு உட்பட்ட அன்னையர் மன்ற உறுப்பினர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஊட்டச்சத்து தின்பண்டம் வீட்டு தோட்டம் அமைப்பதற்கான விதைகள் பருப்பு பொடி முருங்கை கீரை பொடி பேரிச்சம் பழம் மற்றும் விழிப்புணர் நோட்டீஸ் அடங்கிய ஒரு சணல் பேக் வழங்கப்பட்டது . பிசியோ தெரபிஸ்ட் டேரிஸ் பிரமிளன் மற்றும் கயல்விழி ஜெயசீலன் திருப்பலி சக்திவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர் . ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மதி மரியம்மாள் பயிற்சி சான்றிதழ் வழங்கினர். பயிற்சியில் செக்கோவர் அலுவலர்கள் சூர்யா ரவீந்திரன் ராஜாராம் அரவிந்தன் குலசேகர் சங்கீதா அரசு ராஜசேகர் சிவானந்தன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.