February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

” என் ஊர் என் கனவு”( இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்புக்கான) ஆலோசனைக் கூட்டம்…

அமைச்சர்சு. முத்துசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது…

ஈரோடு. ஜன. 31

தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள என் ஊர் என் கனவு திட்டத்திற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் புதியதாக என் ஊர் என் கனவு என்ற செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

என் ஊர் என் கனவு என்ற புதிய இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையிலும், நீண்ட நாள் கனவு கோரிக்கையாக இருந்து வரும், கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் புதிய திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தமிழக அரசின் என் ஊர் என் கனவு என்ற புதிய திட்டத்தின் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் சு முத்துசாமி பேசியதாவது…

என் ஊர் என் கனவு என்பது தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் ஒரு சிறப்பான திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஊரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது தங்கள் சொந்த ஊரில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் நூலகங்கள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்த நிதி அல்லது தொழில்நுட்ப உதவி வழங்க மலிவு வகை செய்வதாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் கிராம புறங்களில் தார் சாலைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தல் ஊர்களில் மரக்கன்றுகளை நடுதல் நீர் நிலைகளை தூர்வாருதல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளையும், மேலும் நமது ஊர் முன்னேற நாம் ஊரில் பிறந்து வளர்ந்த மக்களும் தங்கள் கனவு வளர்ந்த மக்களுக்கு தங்கள் கனவு ஊரை உருவாக்க ஒரு வாய்ப்பாக இந்தத் திட்டம் விளங்குகிறது.

இது ஊர் மீதான பற்றை அதிகரிப்பதோடு நவீன வசதிகள் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும். இந்தத் திட்டம் அதற்கு பேர் உதவியாக இருக்கும். எனவே மாவட்ட அளவில் இங்கு வந்துள்ள பொதுமக்கள் தங்கள் ஊரின் முன்னேற்ற கனவுகள் எண்ணங்கள் குறித்து எழுத்து மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

என் ஊர் என் கனவு கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள், சார்ந்த வல்லுநர்கள் அரசு சாரா அமைப்புகள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகழ் பெற்ற ஆளுமைகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்து பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி சி சந்திரகுமார், அந்தியூர் ஏ ஜி வெங்கடாசலம் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா முன்னாள் ஈரோடு ஆட்சியர் பிரபாகரன், சக்தி மசாலா நிறுவன இயக்குனர்கள் சாந்தி துரைசாமி, ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் நிறுவனத்தினர், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் மாவட்ட அளவிலான துறை சார்ந்த அரசு அலுவலர்கள் நேரடியாகவும் காணொளி மூலமாகவும் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.

மேலும் கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் 2030க்கான சுற்றுச்சூழல் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Facebook
YouTube
Instagram
WhatsApp