விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கொத்தமங்கலம் கிராமம் ஏரி அருகில் ஆதரவின்றி சுமார் 95 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவரும், அவருடன் மாற்றுத்திறனாளியான மகனும் இருப்பிடம் இல்லாமல் தார்பாய் அமைத்து வசித்து வந்தனர். மழை காலங்களில் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த உதவும் உள்ளங்கள் ட்ரஸ்ட் குழுவினர் நண்பர்களிடத்தில் உறுப்பினர்களிடத்தில் மற்றும் வானூர் மனமகிழ் மன்றம் குழுவினரிடத்தில் உதவி பெற்று மூதாட்டிக்கு ஷீட் வீடு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாத்திரம், உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மனமகிழ் மன்றம் நண்பர்கள், உதவும் உள்ளங்கள் ட்ரஸ்ட் நிறுவனர் ஜான் சத்தியசீலன், உறுப்பினர்கள் இல்லோடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஸ்டாலின், டாக்டர். விவேக், அறிவழகன், சத்தியராஜ், ஹீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவும் உள்ளங்கள் டிரஸ்ட் சார்பில் மூதாட்டிக்கு வீடு வழங்கல் :

More Stories
வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகளையும் வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பயனாளிகள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் – காயல் அப்பாஸ் !