ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்
ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி ஏ.கே. ராஜசேகர் கோரிக்கை
புதுச்சேரி, டிச.3-
ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஏ.கே. ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிட்வா புயல் மழையால் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கியுள்ள புதுச்சேரி மக்களின் துயரைத் துடைக்க, அனைத்து குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வாழ்வாதார நிவாரண நிதியாக தலா ரூ.10,000 வழங்க வேண்டும். புயல் மழையால் இடிந்து மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை உடனடியாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
சேதமடைந்த மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகளின் சேத மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
டிட்வா புயல் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் உயிரைக் காக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் சாலைகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்