July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு, ஜூலை 28 :

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகளைக் கண்டித்தும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் புரட்சிக் கழகத்தைச் சேர்ந்த நஞ்சனாபுரம் வேலு தலைமை தாங்கினார்.

இதில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாநகரச் செயலாளர் செயப்பிரகாசம், திராவிடர் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் சௌந்திரபாண்டியன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், கொங்கு விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் விஸ்வநாதன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சித்திக், ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்டச் செயலாளர் வீரவேந்தன், திராவிடர் எழுச்சி பேரவையின் தலைவர் சக்திவேந்தன், ஈரோடு மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் நிலவன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பள்ளிபாளையம் பகுதி பொறுப்பாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

பேச்சாளர்கள், நீட் தேர்வு சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது என்றும், நுழைவுத் தேர்வுகள் மாநிலங்களின் கல்வி உரிமையை பாதிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் புரட்சிக் கழகத்தைச் சேர்ந்த சே.மே.மரியதாஸ், சகாயபுரம் பிரபு, சதிஸ்சமரன், வேப்பம்பாளையம் ரமேஷ், வழக்குரைஞர் சுபாஷ், கார்த்திக் நெடுமாறன் ஆகியோரும், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கலியபெருமாள், ரங்கசாமி, ராமசாமி, ரவி, சிவா, பிரபு, வாசு, முகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த குரு நன்றியுரை ஆற்றினார்.