திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தயா அறக்கட்டளை ஆட்சியருக்கு வேண்டுகோள்…
ஈரோடு ஜூன். 10
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினர் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஈரோடு தயா அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளை வழியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாளவாடி பகுதியில் ஒரு அரசு தங்கும் விடுதி உள்ளது. ஆனால் அந்த விடுதி கடந்த மூன்று ஆண்டு காலமாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நான் இருக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர்.
அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் ( எஸ் டி ) சமூக சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல தலை முறைகளாக இங்கு வசித்து வரும் இந்த பழங்குடியினர் சமுதாய மாணவர்களுக்கு,, பள்ளி, கல்லூரி படிப்பதற்கும் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கும் இந்த சான்றிதழ் என்பது மிக அவசியமாக உள்ளது.
எனவே மலை கிராமங்களில் வாழும் மலை கிராமம் பழங்குடியினர் மாணவர்களுக்கு உரிய அரசின் தங்கும் விடுதி திறந்து வைக்க வேண்டும் மேலும் பலங்குடியினர் ( ST) ஜாதி சான்று வழங்க வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தயவு கூர்ந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஈரோடு தயா அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.