மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மேயர் நாகரத்தினம் மரியாதை..
ஈரோடு. ஜன. 28
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு 46 புதூர் ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில், ஈரோடு ஆட்சியர் கலந்து கொண்டு மூவர்ணக் கூடிய ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு நற் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இதேபோல் ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மேயர் நாகரத்தினம் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின், உதவி ஆணையாளர் தனலட்சுமி, துணை மேயர் வி. செல்வராஜ் மாநகரப் பொறியாளர் கோ. முருகேசன், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர் பி. கே . பழனிசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மாணவ மாணவியர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறந்த பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு, ஆர் எம் ஓ சசிரேகா சான்றிதழ்களை வழங்கினார்.
அதேபோல் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
இதே போல் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் 77 வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!