பட்டங்களை வழங்கிய பின் பெருந்துறை– ஈரோடு மருத்துவமனைகளை ஆய்வு செய்த அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்ராஜ்…
ஈரோடு. ஜூன். 16
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் பட்டங்களை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழக மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்து இருப்பு, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி, கழிப்பறை, புற மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, வாகனம் நிறுத்துமிடம், சுற்றுப்புறத் தூய்மை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ச்சியாக மருத்துவ பயனாளர்களுடன் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.


மேலும் இந்த மருத்துவமனைக்கு வருகை தரும் மருத்துவ பயனாளர்கள் விபர பதிவேடு, மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் பயன்பாடு, மருத்துவ பயனாளர்கள் விவரம் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட விவரம் மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள், மருத்துவப் பயனாளர்களுக்கு உணவு தயார் செய்யும் உணவு கூடம், பொதுப் பிரிவு உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள மருத்துவ அலுவலர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 34 கோடி மதிப்பீட்டில் பட்டுள்ள நூறு படுக்கை அறைகள் வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தினை ஆய்வு செய்தார்.
இந்த ஆவின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இந்த மோகன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ரவிக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்த ஆவின் போது சுகாதாரத்துறை அமைச்சர் கே ஜி அருள்ராஜ் மக்களுக்கான மருத்துவ சேவைகள் தங்கு தடை இன்றி கிடைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.