June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இதுவரை நின்ற தேர்தலில் எல்லாம் வென்று காட்டியவர் சேர்மன் எஸ். பாலு..

குமாரபாளையம் தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் திமுக தொண்டர்கள்..

பள்ளிபாளையம். ஏப்ரல். 18

குமாரபாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேர்மன் எஸ். பாலு இதுவரை நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்று காட்டியவர் என்றும் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று குமாரபாளையம் தொகுதியை திமுக வசம் ஆக்குவார் என தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சேர்மன் எஸ். பாலு அறிவிக்கப்பட்டு அவர் தொடர்ந்து தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மாற்று அணியைச் சேர்ந்த வேட்பாளர் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த முறை குமாரபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சேர்மன் எஸ். பாலு வெற்றி பெற்று குமாரபாளையம் தொகுதியை கைப்பற்றுவார் என தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொகுதி முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளர் சேர்மன் எஸ் பாலுவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
குமாரபாளையம் பகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சேர்மன் எஸ். பாலு இதுவரை யூனியன் சேர்மன் ஆக இரண்டு முறையும், யூனியன் கவுன்சிலர் ஆக இரண்டு முறையும் நான் போட்டியிட்ட தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.