June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – தாயுமானவர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து தமிழ்நாடு நியாய விலை கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளர் நியமணம் செய்ய வேண்டும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் நியாய விலை கடைகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் பணியில் இருக்கும் போது இறந்த நியாய விலை கடை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து வகை நோய்களுக்கும் மருத்துவம் செய்வதற்கு ஏதுவாக காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நியாய விலை கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்