June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 15000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று 10.02.2026 சின்ன வீராம்பட்டினம் பகுதியில் இருந்து தொடங்கி வைத்தார்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் 15,000 குடும்பங்களுக்கு மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

அதன்படி இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை இன்று 10.02.2026 காலை மணவெளி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் இருந்து வீடு வீடாக சென்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மணவெளி சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.