February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர் அண்ணா சிலை அருகில் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பயங்கரவாதிகள்போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர். என். யவியை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வரும் ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பண்பாடு தமிழர்களின் கலாச்சாரத்திற்கு ஆளுநர் ரவி மதிப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாட்டிற்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் ஆளுநர் பேசி வரும் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp