வந்தவாசி, டிச 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அம்பேத்கரின் அரும்பணிகள்…! என்ற தலைப்பில் பட்டதாரி ஆசிரியர் ம. ரகுபாரதி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர் மஹாவீர், ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். அம்பேத்கரின் அரும்பணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 10, +2 தனித்தேர்வு மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.