நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் 15 அதிமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே ஜி அருண் ராஜ் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதன் காரணமாக திருச்செங்கோடு ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பலம் அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் கட்சி துண்டை அணிவித்து வரவேற்றார். தவெகவில் இணைந்த அனைவரும் கட்சிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே ஜி அருண்ராஜ் வேண்டுகோள் வைத்தார்.
அமைச்சர் அருண் ராஜ் முன்னிலையில் அதிமுக பிரமுகர் ஐக்கியம்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.