வந்தவாசி, நவ 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரமணன் தலைமையில்
நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கடேசன், அருள் ஜோதி முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் துரை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட செயலாளர் தனசேகர் பங்கேற்று சங்க வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.பிரபாகரன் தலைமையில்
10 க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பையன், கங்கா,பவானி, மாநில பொதுச் செயலாளர் ரவி, மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்,மாநில துணைத் தலைவர் ஆதிலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், வந்தவாசி வட்டத் தலைவர் ஆர்.தமிழ்மாறன், வட்ட செயலாளர் வி.பாரதி, வட்ட பொருளாளர் கே.பாக்யராஜ், துணைத் தலைவர் மோகன், இணைச் செயலாளர் வி.விஜய குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், எம்.தரணி லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் பாபு நன்றி கூறினார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..