February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் ரூ 3.12 கோடி மதிப்பீட்டில் வேலந்தாங்கல் தாயனூர் வழியாக ஆத்திப்பட்டு சாலையை அகலப்படுத்தி புதியதார்சாலை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்………

விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேல்மலையனூர் ஒன்றியம்வேலந்தாங்கல்,தாயனூர் வழியாக ஆத்திப்பட்டுசெல்லும் சாலையை
3 கோடியே 12 லட்த்தி 25 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில்ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித் தடமாக மாற்றி அகலப்படுத்தி சாலையை வலுப்படுத்துதல் பணிக்கு பூமி பூஜை விழா தாயனூர் ஊராட்சியில் நடைபெற்றது.

மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராஜேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நெடுஞ்சாலை துறை செஞ்சி உட்கோட்ட பொறியாளர் அக்பர் அலி, உதவி பொறியாளர்கள் விஷ்ணு பிரியா, பாலாஜி,மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி
தக்ஷிணாமூர்த்தி,ராஜா நிர்வாகிகள் எஸ்.பி. சம்பத், அரிதாஸ்,தோப்பு சம்பத்,செல்வம், சிவா, ரஜினி,காமராஜ்,ராஜ்குமார்,இளைஞர் அணி தாஸ், ஹரிஷ்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp