February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி ஒன்றியம் தென் புதுப்பட்டு ஊராட்சியில் ரூ 2.60 கோடி மதிப்பீட்டில் தளவானூர் வழியாக தென்புதுப்பட்டு, கொம்மேடு சாலையை அகலப்படுத்தி புதியதார்சாலை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்………

விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செஞ்சி ஒன்றியம் விழுப்புரம் சாலை முதல் தளவானூர் வழியாகதென் புதுப்பட்டு, கொம்மேடு,
செல்லும் சாலையை
2கோடியே 59லட்த்தி 80ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில்ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித் தடமாக மாற்றி அகலப்படுத்தி சாலையை வலுப்படுத்துதல் பணிக்கு பூமி பூஜை விழா தென்புதுப்பட்டு ஊராட்சியில் நடைபெற்றது.

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர்
விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நெடுஞ்சாலை துறை செஞ்சி உட்கோட்ட பொறியாளர் அக்பர் அலி, உதவி பொறியாளர்கள் விஷ்ணு பிரியா, பாலாஜி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தனசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்குமார்,ஒன்றிய பிரதிநிதிகள் அய்யாதுரை, கோட்டீஸ்வரன், ‘ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி,நிர்வாகிகள் அருள், ஆல்பர்ட்,ரங்கநாதன், குப்புசாமி, சங்கர், வெள்ளக் கவுண்டர்,காசி, சேகர், சம்பத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp