புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, சுல்தான்பேட்டை ராஜா நகரில் இருந்து முத்துப்பிள்ளைப்பாளையம் வரை செல்லும் பல்ல வாய்க்காலில் இருந்து அப்துல்கலாம் நகருக்கு கிளை வாய்க்கால் அமைக்கும் பணிக்கு ரூ. 37,53,631/– நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணி மற்றும் ரூ. 1.16 கோடியில் அப்துல்கலாம் நகர், ரஹமத் நகர், ஜாகீர் உசேன் நகர், 5 ஸ்டார் நகர், திப்பு சுல்தான் நகர் மற்றும் 3 ஸ்டார் நகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு மூலம் சாலை அமைக்கும் பணிக்கான துவக்க நிகழ்ச்சி இன்று காலை அப்துல்கலாம் நகரில் நடைபெற்றது.
இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, வடிகால் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் லூயிப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் பிரத்தீவி, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் குலோத்துங்கன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜாமத்தார்கள், ஊர் பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!