இன்று கல்வித்துறையில் பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சரைபள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அப்பா அப்பா என பெரு மகிழ்ச்சியுடன் அழைப்பதாக செஞ்சியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏகலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரண பொருட்களை வழங்கி பெருமிதம் தெரிவித்தார்……….
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எல்.எல்.ஏ.கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரண பொருட்களை வழங்கி குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புறையாற்றினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.பேசுகையில்:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது முன்னாள் பிரதமர் நேருவை மாமா என்று அழைத்தனர்.அந்த வகையில் இன்று தமிழகத்தில்கல்வியின் மூலம் தான் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்த்த முடியும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் கல்விக்கு தனி கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கல்வித்துறைக்குபல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.உயர்கல்வியில்படிப்பதற்காகவும் வெளிநாட்டில் சென்று படிப்பதற்காவழிவகை செய்கின்ற திட்டங்களாகவும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு36 லட்சம் ரூபாய் வழங்கி உள்ள தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்தவுடன் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்முதலமைச்சரை அப்பா அப்பா என்று பெரு மகிழ்ச்சியுடன் அழைப்பதாக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பெருமைப்பட தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், நகர செயலாளர் கார்த்திக், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பொன்னம்பலம்,சுமித்ரா சங்கர்,தலைமை ஆசிரியர் ஆயிஷா பேகம், நிர்வாகிகள்மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா, தொண்டரணி பாஷா, கோகுல், அறிவழகன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!