சுதந்திரத்திற்குப் பிறகு பல துண்டுகளாக இருந்த இந்தியாவை ஒன்றிணைத்து வலுவான இந்தியாவாக வடிவமைத்து நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சாரும். இதனாலேயே இந்தியாவின் இரும்பு மனிதர் எனவும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு பெருமை வாய்ந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளை இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் இயக்கத்தின் மூலம் ஒற்றுமை பாதயாத்ரா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் தொடங்கிய ஒற்றுமை பேரணியை அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மைபாரத் இளையோர் மாவட்ட அலுவலர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். பேரணியில் பொய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர் வி.கைக்காட்டியில் தொடங்கிய இந்த ஒற்றுமை பேரணி ரெட்டிப்பாளையம், மயிலாண்டகோட்டை உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சென்று புதுப்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முடிவடைந்தது இதனையடுத்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமைகள் அவர் நாட்டிற்கு செய்த தொண்டுகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மை பாரத் இயக்க அலுவலர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் காவலர்கள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அரியலூர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமைகளை இளைஞர்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டனர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்