தமிழ்நாட்டில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தான் பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்நிம்மதியாக வாழ்ந்து வருவதாக மேல்மலையனூரில் நடைபெற்றவாக்குச்சாவடி முகவர்கள், டிஜிடல் பூத்ஏஜென்ட் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேச்சு…..
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் கிழக்கு, மதியம் ,மேற்கு ஆகிய ஒன்றி திமுக சார்பில் வாக்குச்சாவடிமுகவர்கள், பூத் டிஜிடல் ஏஜன்ட் நிர்வாகிகள்கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மேல்மலையனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத் தலைவர்கள் மன்ன ஏழுமலை, ஆறுமுகம், உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். செஞ்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்நெடுஞ்செழியன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. பேசுகையில்:
திமுக நிர்வாகிகள் அனைவரும் கவனம் செலுத்தி திமுக ஆட்சியில்முதலமைச்சர் செய்த சாதனைகளை ஒவ்வொரு வீடாக எடுத்து சொல்லி வாக்குகள் சேகரிக்க வேண்டும் ,செஞ்சி மயிலம் திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்மாபெரும் வெற்றி பெறுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்புடன் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் நிர்வாகிகள் கவனமுடன் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்நீக்குதல் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும்10 ஆண்டு காலமாகபிரதமர் மோடி செய்கின்ற பல்வேறு துரோகத்தை தாங்கிக் கொண்டு இன்றைக்கு இந்திய பொருளாதாரத்தில் ஒன்றிய அரசு பின்தங்கி உள்ளது ஆனால் தமிழ்நாடு முந்தி வருகிறது என்ற நிர்வாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வரலாறுபடைத்து வருகிறார் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தோற்கடித்த வரலாறு திமுகவுக்கு உள்ளது .பிரதமர் மோடி அவர்களே எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என மக்கள் தீர்மானித்துள்ளனர் அந்த வகையில் திமுக வெற்றி பெறுவது உறுதி.
ஆனால்
பீகார் மக்கள் தமிழ்நாட்டில் அவமதிக்கப்படுகிறார்கள் என பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறாக தெரிவித்துள்ளபிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் பீகார் உள்ளிட்ட பிற மாநிலத்தை சேர்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவருவதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ உறுதிபட தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன்,ஒன்றிய செயலாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், நாராயணமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.