June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மேல்செவலம்பாடி குப்பம்: ஆலயப் பணம் வழங்கப்படவில்லை என சிற்பி மனோகரன் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம்:
மேல்செவலம்பாடி குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதுப்பிப்பு பணியை செய்து முடித்தும், தமக்குக் கூலி வழங்கப்படவில்லை என சிற்பி மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சிற்பி முனுசாமியின் மகன் மனோகரன், இரண்டு வருடங்களுக்கு முன்பு மேல்செவலம்பாடி குப்பம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தப் பணியை பெற்றிருந்தார். பழைய கோயிலை இடித்து, புதிய கோயில் கட்டுமானம் செய்ய ₹31 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதில் தொடக்க அட்வான்ஸாக ₹50,000 மற்றும் பிற கட்டங்களாக மொத்தம் ₹8 லட்சம் வரை வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன் பின் எந்த தொகையும் வழங்கப்படவில்லை என்றும், தன்னுடைய சொந்த செலவில் கோவிலின் அனைத்து சிற்ப மற்றும் கட்டுமானப் பணிகளையும் முடித்துவிட்டதாகவும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

வேலை முடிந்த பிறகும் பணம் வழங்கப்படாததோடு, தாம் கேட்கும்போது “காவல் நிலையம் வரைக்கும் அழைத்துச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

“இரண்டு வருட உழைப்பும் செலவுமெல்லாம் வீணாகி விட்டது. எனவே எனக்கு உரிய தொகையை வழங்கி நீதியளிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
— சிற்பி மனோகரன்‌