February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு…!

வந்தவாசி, நவ 07:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எஸ்.மோட்டூர், நாவல்பாக்கம், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி இன மக்கள் கடந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மனை பட்டா இடம் கேட்டு போராடி வருகின்றனர். அதற்கான செயல்பாடு இன்னும் முடிவடையாத சூழலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.சம்பத்குமார் அவர்களிடம் முறையாக மனு அளித்தனர். கோட்டை மூலை பகுதியில் இருந்து மனுக்களை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அப்துல் காதர், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட குழுவினர் சுகுணா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp