February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய தாயுமானவர் திட்டம்.

தமிழக முதல்வர் தொடங்கிய ‘தாயுமானவர் திட்டம்’ மூலம், சேலம் மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் இனி அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் 92,998 பேர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது, 65 முதல் 70 வயதுக்குட்பட்ட முதியவர்கள் உட்பட மேலும் 17,267 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1,10,265 பேர் (1,06,421 முதியவர்கள் மற்றும் 3,844 மாற்றுத்திறனாளிகள்) மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலேயே பெற்று மகிழ்கின்றனர்.

இந்தத் திட்டம் சேலம் மாவட்டத்தில் 1,207 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 1,447 வாகனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சி/நகராட்சிகளில் 70 ரேஷன் கார்டுகளுக்கும், மலைப்பகுதிகளில் 50 ரேஷன் கார்டுகளுக்கும், கிராமப் பகுதிகளில் 60 ரேஷன் கார்டுகளுக்கும் ஒரு வண்டி என்ற விகிதத்தில் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற 2 மற்றும் 3-ம் தேதிகளில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp