புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வேதாந்து ஆச்சாரியா கல்வி மையங்கள், NEET UG 2026 மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற NEET தேர்வில், புதுச்சேரி மையங்களைச் சேர்ந்த 16 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.மேலும், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய தொழில்நுட்பக் கழகங்களான (NIT) NIT-களில் இடங்களைப் பெற்றுள்ளனர்.


NEET-ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மூன்றில் ஒருவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரு மாணவர்கள் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.மீண்டும் NEET தேர்வை எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் சாதனையும் இந்த ஆண்டின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
அதில், புதுச்சேரி மையத்தைச் சேர்ந்த ருத்ராக்ஷ், கடந்த ஆண்டு 214 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 632 மதிப்பெண்கள் பெற்று 418 மதிப்பெண்கள் உயர்வு கண்டுள்ளார்.
இந்த சாதனையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் ஜே. அரவிந்தன் பேட்டியளித்தார். அப்போது, மாநகரங்களைத் தாண்டியும் தரமான கல்வியை மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கொண்டு சென்று, மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் அதிக மாணவர்களை உருவாக்கும் நோக்கில் வேதாந்து ஆச்சாரியா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர் ஸ்ரீதர், லலித் ஸ்ரீதர், நூர் முகமது, டாக்டர் சிவகிரண், கவிதா, ஷாலினி மற்றும் முஹம்மது பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
திருவரங்கத்தில் இன்று பரபரப்பு சம்பவம்
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காகித மடிப்பு கலைகள் பயிற்சி…!