February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் நண்பர்களுடன் உயிர் தப்பிய ஐயப்ப பக்தர்கள் :

திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே கல்லுப்பட்டி சாய்பாபா கோவில் எதிரே குரோம்பேட்டை சேர்ந்த பூவாசகம் மகன் வேல்முருகன் ( 40 ) ஓட்டுநரான இவர் தனது நண்பர்களுடன் 19. 11. 2025 ம் தேதி தங்களது வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் தனக்கு சொந்தமான TN 11 AU 28 21 Hyundai i20 என்ற பதிவில் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சபரிமலை சென்று விட்டு மீண்டும் இன்று குற்றாலத்தில் இருந்து புறப்பட்டு மதுரை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால் திடீரென நிலை தடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனின் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு சக்கர வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் உயிர்த்தப்பினர் விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தில் போக்குவரத்து இடையூறுகள் ஏதுமில்லாமல் தவிர்க்கப்பட்டது ,மற்றும் தகவல் அறிந்து வந்த துவரங்குறிச்சி போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp