February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முதலமைச்சரிடம் ஆசி பெற்றார் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் மாநில துணைத்தலைவர் மருதமலையார்!தாயின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு

புதுச்சேரி:

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மருதமலையார் (எ) மருதமலை ஏகேஜி சித்தார்த் அபிமன்யு அவர்கள், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களைச் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
மேலும் அப்பாபைத்திய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் முக்கியப் பொறுப்பான, தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் பதவி தனக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரைச் சந்தித்த மருதமலையார், அவரிடம் பூங்கொத்து வழங்கி வாழ்த்து மற்றும் ஆசி பெற்றார்.

இச்சந்திப்பின் போது, தனது தாயாரின் திருவுருவச் சிலையை திறந்து வைப்பதற்கான விழாவிற்கு வருகை தந்து, சிலையைத் திறந்து வைக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு மருதமலையார் அன்பு அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் அவர்களை மருதமலையார் நேரில் சந்தித்தார். அப்போது தனது புதிய பதவி குறித்துத் தெரிவித்து அவரிடம் வாழ்த்துக்களைப் பெற்றார்.
மேலும்,புதுச்சேரி அமைச்சர் ஜான் குமார் அவர்களையும் நேரில் சந்தித்து, தனது புதிய பொறுப்பிற்காக வாழ்த்துக்களை பெற்றார்.

இந்தச் சந்திப்புகளின் போது லோகேஷ் அபிமன்யுடன் மற்றும் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp