விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் உள்ள வ.உ.சி தெருவில் பொது நிதி திட்டத்தின் கீழ் 17.70 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் புதிய வடிகால்வாய் காலுடன், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய வடிகால்வாய் காலுடன் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் கவுன்சிலர் லதா கார்த்தி,நிர்வாகிகள் முருகன், கோபி, கார்த்திக், பழனி, ஜோசப், ஜான், கிஷோர்,ரிஸ்வான், அருள், மகளிர் அணி ஸ்டெல்லா, பிரேமா தொண்டரணி பாஷா,பணி ஆய்வாளர் கௌதமன்உள்ளிட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

More Stories
குறிஞ்சிப்பை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் ஊர்வலம்
புதுச்சேரியில் சங்கமம்: பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நெட்வொர்க் அசோசியேஷன் மாநாடு!