July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசியல்

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அறிவிப்பு. புதுச்சேரி மக்களை ஏமாற்றும்...
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இலதா பாலு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது திமுக மாவட்ட...
பின்னர் வாக்காளர்களிடம் அதிமுக வேட்பாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது: புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டை பகுதிகளில்...
புதுச்சேரி: மங்கலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான முனைவர் கண்ணபிரான், தனது ஆதரவாளர்களுடன் லட்சிய ஜன நாயக...
​புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்த சரவணன், இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப்...

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் பேராதருடன் உருளையன்பேட்டை தொகுதியில்நேயம் மக்கள் கழக தலைவர் அண்ணன் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவை செய்திட வரிசை எண் : 7குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்… என்று28.03.2026… மாலை 6:00 மணி அளவில் புதுப்பாளையம் வார்டுசஞ்சய்காந்தி நகர்,பாவேந்தர் வீதி,வ.உ.சி வீதி,தமிழ் மகள் வீதி, போன்ற பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்…. மேலும் மேற்கண்ட பகுதி பொதுமக்களின் நலனுக்காக சுத்தமான குடிநீர் வழங்கிட சுதேசி மில் வளாகத்தில் உள்ள இரண்டடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீரை சுத்திகரிக்கும் வழியில் உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்தமான குடிநீர் வீடுகளுக்கு விநியோகிக்கும் வகையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது… மேலும் மேற்கண்ட பகுதியில் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது… மேலும் இப்பணிகள் தொடர வாக்களியுங்கள் குக்கர் சின்னத்தில் என்று வாக்குகள் சேகரிக்கப்பட்டது….நிகழ்வில் உருளையன்பேட்டை தொகுதிதமிழக வெற்றிக் கழக பிரமுகர்களும், நிர்வாகிகளும் மற்றும்நேயம் மக்கள் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர்...

தி.மு.கவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கு மாவட்ட செயலாளரும் , அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரமான வ. வினோத் கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.திமுக தலைமைப் பொறுப்புகள் மற்றும் முக்கிய பதவிகள் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது.இது மற்ற திறமையான தொண்டர்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகள் எழுகின்றனர்.சட்டம் ஒழுங்கு மற்றும் ‘அராஜகம்’தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது நில அபகரிப்புப் புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் தலையீடு உள்ளூர் மட்டத்தில் அதிகமாக இருக்கும் என்பது நீண்டகால விமர்சனமாகவே உள்ளது. ‘கட்டப் பஞ்சாயத்து’ போன்ற கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சம் ஒரு தரப்பு மக்களிடையே நிலவுகிறது.ஊழல் புகார்கள்கடந்த காலங்களில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு போன்ற பெரிய அளவிலான ஊழல் புகார்கள் அக்கட்சியின் மீது சுமத்தப்பட்டன. தற்போதைய ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை விசாரணைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், நீட் தேர்வு ரத்து போன்றவை) முழுமையாக நிறைவேற்றவில்லை இதனால் அதிருப்தியில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே உள்ளது.விலைவாசி உயர்வு மற்றும் கட்டண உயர்வுமின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் ஆவின் பால் விலை உயர்வு போன்றவை நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பாதிப்பதாக உள்ளது . இது இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியாகப் பார்க்கப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்காமல் திமுக துரோகம் செய்தது. வன்னியர்களை பெரும்பான்மையாக வாக்காளர்களாக கொண்டுள்ள அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வன்னியர்களுக்கு சீட்டு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு முன் நின்று போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.