February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நள்ளிரவில் கிராவல் மண் அள்ளிய டிப்பர்லாரி பறிமுதல் மற்றும் இருவர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கிராவல் மண் அள்ளுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டி குளத்தில் கிராவல் மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சின்ன கோன் பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கிராவல் மண் எடுத்துச் சென்ற டிப்பர் லாரி உரிமையாளர் ரஞ்சித் (27) மற்றும் டிப்பர்லாரி டிரைவர்பிரகாஷ் (28) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மெய்யம்பட்டி குளத்தில் கிராவல் மண் அள்ளியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் டிப்பர்லாரி மற்றும் இருவரையும் புத்தாநத்தம் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர் மேலும் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் டிரைவர் ஆகியோரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp