June 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தனி நபர்களால் தடைபட்டுள்ள திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி வேண்டும் குண்டூர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது, எங்கள் ஊரில் செல்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க இக்கோவில் தேர் திருவிழாவை ஊர் மக்கள் ஒன்று கூடி விமரிசையாக செய்து வருகிறோம். எங்கள் ஊரைச் சேர்ந்த சில தனிப்பட்ட நபர்களால் ஊர் திருவிழா தடைபட்டுள்ளது எனவே ஊர் திருவிழாவை நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வலியுறுத்தி குறைந்த நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.