June 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செய்தியாளர் பழனிவேல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்! தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் த.செங்கோடன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர்கள் : .ராஜேந்திரன், .ரெங்கராஜன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: மு.மாதவன், மீராமொய்தீன். த.செல்வராஜ், .ராஜேந்திரன் .ராதாகிருஷ்ணன், மாநகரச் செயலாளர .நாடிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள்: சுந்தர்ராஜன், ஜீவா, நடராஜன் செல்வகுமார் முருகன்,அரசப்பன், திலகர், மளிகை பாலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.