June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்பு :

திருச்சியில் 24.06.2026 அதிகாலை 5.50 மணிக்கு பாவை பவுண்டேஷன், எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு, திருச்சி காப்பகத்தில் இருந்து காணாமல் போன சிறுவர்கள் 1) கணேஷ் வயது 17 க, 2) வீரேந்திரன் ஷா வயது 13 என்பவர்களை திருச்சி ரயில் நிலைய நடைமேடை அலுவலில் இருந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் 166 பிலால் மொய்தீன் மற்றும் பெண் காவலர் 639 அர்ச்சனா ஆகியோர் ரோந்து பணியில் இருக்கும் போது நடைமேடை 5 ல் சுற்றித்திரிந்த சிறுவர்களை விசாரணை செய்ததில் சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து காணாமல் போனவர்கள் என்று தெரிய வர அவர்களை மீட்டு திருச்சி ரயில் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் மூலம் பாவை பவுண்டேஷன் மேலாளர் முரளீசுவரன் மற்றும் அருண் சின்னையா கணபதி அவர்களை தொடர்பு கொண்டு ரயில் நிலையம் வரவழைத்து அவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சி மாநகரம், பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து , Boy missing வழக்கு பதிவு செய்யப்பட்டது , என்று கூற பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மோகன சுந்தரிக்கு தகவல் தெரிவித்து, திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு வரவழைத்து முன்னிலையில் சிறுவர்களை பாதுகாப்பு விடுதியில் சேர்க்கப்பட்டது .

You may have missed