வந்தவாசி, ஜூன் 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில்தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பலரும் உற்சவ மூர்த்தி அமர்ந்த தங்கத் தேரை கோவில் பிரகாரத்தில் மேளதாளத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இந்த வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
வழூர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தேரோட்டம்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்பு
புதுச்சேரி முலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது