September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

கந்தர்வகோட்டை ஜீன் 20

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மாணவர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை யோகாவின் நன்மைகள் குறித்தும், அடிப்படை மூச்சுப் பயிற்சி, கண் பயிற்சி,வஜ்ராசனம்,பத்மாசனம் உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளை செய்து காண்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா சர்வதேச யோகா தினம் குறித்து பேசும் பொழுது

யோகா என்பது உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பாதுகாக்கும் கலையாகும்.
சர்வதேச யோகா தினம் என்பது யோகாவை அங்கீகரிக்கும் ஒரு நாளாகும் , இது 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா பயிற்சிகள் உடல் மற்றும் மன நலத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் வழங்குகிறது.

இந்த ஆண்டு , “நல்வாழ்வு, ஞானம் மற்றும் உலக அமைதிக்கான யோகா” என்ற கருப்பொருள்களில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் யோகாவின் பங்கை ‘நல்வாழ்வு’ சிறப்பித்துக் காட்டுகிறது என்றும், மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் யோகாசனப் பயிற்சியை தொடர்ந்து செய்து பலன் பெற வேண்டும் என பேசினார்.