June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கனிணிமயமாக்கல் UNITE e PACCS ERP தொடர்பாக கூட்டுறவுத்துறை அலுலர்களுக்கான பயிற்சி ஹோட்டல் கோஸ்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
திரு. க.பா.அருளரசு தலைமை வகித்தார்.

16.6.2026 முதல் 19.6.2026 வரை இரண்டு கட்டமாக இப்பயிற்சி நடைபெற உள்ளது

நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்து விளக்கு ஏற்றி முதல் கட்ட பயிற்சி தொடங்கப்பட்டது.

பயிற்சியாளர்களிடையே இணைப்பதிவாளர் அவர்கள் கணினிமயமாக்குதல் அவசியம் பற்றி உரையாற்றினார்.
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் ஜேசுதாஸ், சுரேஷ்,அறிவழகன், திருநாவுக்கரசு, பால் ஜோசப், சேகர், ஜெயந்தி, சரவணன்,
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தீனதயாளன் துறை அலுவலர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்