திருச்சி ஜுன் 16:
திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டியப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மலையாண்டி 55/26 என்பவர் தனது தோட்டத்தில் குடிசை வீடு அமைத்து தனது மனைவி தங்கமணி மற்றும் மகன்கள் அழகர், மகேந்திரன் மற்றும் மனோஜ்குமார் ஆகியோருடன் வசித்து வருவதாகவும்,
இவர்கள் அனைவரும் இன்று 11.00 மணி அளவில் தங்களது குடிசை வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தங்களது தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் குடிசை வீடு காலை சுமார் 11.45 மணி அளவில் தானாக தீப்பிடித்து எரிந்ததில் குடிசை வீட்டில் இருந்த TN 45 BV 5599 என்ற பதிவு எண் கொண்ட Hero Splendor Pro இருசக்கர வாகனம், இரண்டு சைக்கிள்கள், பணம் ரூபாய்.12,500 /-, மலையாண்டி மகன்களான அழகர், மகேந்திரன் மற்றும் மனோஜ்குமார் ஆகியோரின் கல்விச் சான்றிதழ்கள், மலையாண்டி என்பவருக்கு சொந்தமாக உள்ள இடத்தின் பட்டாக்கள், ரேஷன் கார்டு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்தன உடனே அருகில் இருந்தவர்கள் மேற்படி குடிசை வீட்டில் பற்றிய தீயை அணைக்க முற்பட்டபோது குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது .

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.